ஜப்பானில் சுற்றுலா பேருந்து விபத்தில் 5 மலேசியர்கள் சிக்கினர் – மலேசிய வெளியுறவு அமைச்சு தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல்.06-

ஜப்பானின் தோக்யோவிற்கு மேற்கே Hachiojiயில் நேற்று இரண்டு சுற்றுலா பேருந்துகள் மோதிய விபத்தில் ஐந்து மலேசியர்கள் லேசான காயமடைந்தனர். தோக்யோவில் உள்ள மலேசியத் தூதரகம் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. Kobotoke சுரங்கப்பாதை நுழைவாயில் அருகே காலை 10.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

JR Tokyo பேருந்து நிலையத்திலிருந்து Yamanashi மாகாணத்தில் உள்ள Kawaguchi ஏரிக்குச் சென்ற இரண்டு சுற்றுலாப் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தன. ஒவ்வொன்றிலும் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் உட்பட 47 பயணிகள் இருந்தனர். ஒரு பேருந்து மற்றொரு பேருந்தின் பின்புறத்தில் மோதியதால் சில பயணிகள் காயமடைந்தனர். சிகிச்சைக்கும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகும், ஐந்து பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாப்பாகத் தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

WATCH OUR LATEST NEWS