கோத்தா பாரு, ஏப்ரல்.07-
கற்பழிப்புச் சம்பவத்தில் பாதிப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த போலீஸ் அதிகாரி, விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளனர்.
கற்பழிப்புச் சம்பவம் தொடர்பான புகாரை மீட்டுக் கொள்ள வேண்டுமானால், அதனை மூடி மறைப்பதற்கு 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சத்தைப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து கோரியதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் அந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.