லோரி ஓட்டுநர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணம்

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

கட்டுமானத் தளத்தில் லோரியிலிருந்து மண்ணைக் கொட்டிய பின்னர், நிலைத்தன்மை இழந்து கவிழ்ந்த லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி அதன் ஓட்டுநர் மரணமுற்றார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் உலு சிலாங்கூவர், அந்தாரா காபி என்ற இடத்தில் நிகழ்ந்தது. லோரியிலிருந்து மண் கொட்டப்பட்ட பிறகு, அதன் உடலமைப்பின், ஜேக் இறங்கி கொண்டு இருந்த வேளையில் லோரி சாய்வுற்றதாக உலு சிலாங்கூர் மாவடட் போலீஸ் துணைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் தெரிவித்தார்.

கவிழும் லோரியிலிருந்து தப்பிப்பதற்கு மின்னல் வேகத்தில் எகிறி குதித்த 36 வயதுடைய அதன் ஓட்டுநர், பத்து டன் எடை கொண்ட லோரியின் அடியில் சிக்கி உயிரிழந்ததாக டிஎஸ்பி முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.

லோரி ஓட்டுநரின் உடலை மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியை நாடியதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS