கோலாலம்பூர், ஏப்ரல்.07-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பிள்ளைகள், பள்ளிக்குச் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு ரெபிட் கேஎல் நிறுவனம் முன்வந்துள்ளது.
ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 76 மாணவர்களின் கற்றல், கற்பித்தல், தொய்வின்றி சுமூகமாக நடைபெறுவதற்கு 5 வேன்களை ரெபிட் கேஎல் வழங்கியுள்ளது.
இந்த வேன்களில் பயணம் செய்யத் தொடங்கிய மாணவர்களில் 42 பேர் தொடக்கப்பள்ளிகளை சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சிய 34 பேர் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.