கோலாலம்பூர், ஏப்ரல்.07-
கடந்த வாரம் நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சந்திப்பு ஒன்றை நடத்தவிருப்பதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் எந்ததெந்த வகையில் உதவ முடியும், அவர்களின் சிரமங்களை எவ்வாறு குறைக்க முடியும் என்பது குறித்து இச்சந்திப்பின் போது பிரதமருடன் அமைச்சு விவாதிக்கும் என்று ஙா கோர் மிங் விளக்கினார்.
காலை 11 மணியளவில் நடைபெறவிருக்கும் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அதன் முடிவு பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
இன்று கோலாலம்பூரில் வாங்கத்தக்க விலையில் உள்ள வீடமைப்புத் திட்டங்கள் மீதான 14 ஆவது கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.