புத்ராஜெயா, ஏப்ரல்.07-
1959 ஆண்டு குற்றவியல் தடுப்புச் சட்டமான போக்காவின் (POCA) கீழ் தாம் தடுத்து வைக்கப்பட்டது, சட்டவிரோதமானது என்றும், தனக்கு உரிய இழப்பீட்டை அரசாங்கமும், போலீஸ் துறையும் வழங்க வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்த சமூக ஆர்வலர் R. ஸ்ரீ சஞ்சீவனின் மேல்முறையீட்டை புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சஞ்சீவன் தடுத்து வைக்கப்பட்டதற்கு புலன் விசாரணை அதிகாரி Poonnam E. Keling பொறுப்பேற்க முடியாது என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்குத் தலைமையேற்ற கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஹர்மின்டார் சிங் டாலிவால் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அதே வேளையில் போலீஸ் படைத் தலைவரும், அரசாங்கமும் இதற்கு பொறுப்பேற்க இயலாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரிலேயே சஞ்சீவன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.