ஆதரவுக் கடிதங்கள் முக்கிய ஆவணங்கள் கிடைப்பதற்கு உத்தரவாதம் அல்ல

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

தனிநபர்களின் முக்கிய ஆவணங்களான மைகாட், மைகாஸ் மற்றும் மைபிஆர் போன்றவற்றை அங்கீகரிப்பதற்கு சில தரப்பினரால் வழங்கப்படும் ஆதரவுக் கடிதங்கள், அந்த முக்கிய ஆவணங்கள் கிடைப்பதற்கு உத்தரவாதம் அல்ல என்ற தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் இன்று விளக்கம் அளித்துள்ளது.

ஆதரவு கடிதம் வழங்கப்பட்டு விட்டதால் அந்த முக்கிய ஆவணங்கள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க வேண்டாம் என்று விண்ணப்பத்தாரர்களை ஜேபிஎன் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆதரவுக் கடிதங்கள் கருத்தில் கொள்ளப்படாது. மாறாக, அந்த முக்கிய ஆவணங்களைப் பெறுவதற்கு 1990 ஆம் ஆண்டு தேசிய பதிவு இலாகா சட்டத்தின் கீழ் போதுமான தஸ்தாவேஜுக்கள் இணைக்கப்பட்டுள்ளனவா? என்பதை மட்டுமே ஜேபிஎன் கருத்தில் கொள்ளும் என்று அவ்விலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS