ஷா ஆலாம், ஏப்ரல்.07-
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின் மொத்த சேதம் 6 கோடியே 54 லட்சம் ரிங்கிட்டாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சேதமுற்ற வீடுகளின் பாதிப்புத் தன்மை குறித்து விரிவாக ஆராயப்பட்டதில் 65.4 மில்லியன் ரிங்கிட் என்பது தெரிய வந்துள்ளது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை தலைமையில் தொழில்நுட்பக் குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 437 வீடுகளாகும் என்று கண்டறியப்பட்டது.
ஒட்டுமொத்த சேதத்தின் மதிப்பு 65.4 மில்லியன் ரிங்கிட் என்பது தீர்க்கமானதாகும். பாதிக்கப்பட்ட வீடுகளில் 81 வீடுகள், முழுமையாகச் தேசமுற்றது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 81 வீடுகள் பாதி சேதமுற்றுள்ளன. 57 வீடுகள் தீப் பிடிக்கவில்லை என்றாலும் பாதிப்பின் தாக்கம் உள்ளன. 218 வீடுகள் பாதிக்கப்படவில்லை என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.