அண்டை வீட்டுக்கார முதியவரைத் தாக்கிய ஆடவர் கைது

மலாக்கா, ஏப்ரல்.07-

மிகச் சத்தமாக காராவோக்கேயில் பாடிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படும் அண்டை வீட்டுக்கார மூதாட்டி மீது எச்சிலை உமிழ்ந்து, அவரை இரும்பினால் தாக்கியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் வியாழக்கிழமை, மலாக்கா, பெங்காலான் ஜாஜார் அலாய், சுங்கை அலாயில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் அளிக்கப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

முதலில் ஏற்பட்ட வாய்த் தகராறு, பின்னர் பெரிய சண்டையாக மாறியதாக நம்பப்படுகிறது. இருவரும் ஒருவரையொருவர் உமிழ்ந்து கொண்டதைத் தொடர்ந்து அந்த நபர், மூதாட்டியைத் தாக்கியதாக கூறப்படுகிறது என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

4 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அந்த நபர், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS