கோலாலம்பூர், ஏப்ரல்.07-
அமெரிக்கா, புஃளோரிடாவில் நடைபெற்ற Embry Riddle Running Elements Classic 2025 போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கத்தை வென்று, இந்த ஆண்டுக்கான தனது முதல் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள மலேசியாவின் தட கள வீராங்கனை ஷெரின் சாம்சன் வல்லபாய்க்கு 4 லட்சம் ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படவிருக்கிறது.
ஆசியான் விளையாட்டுப் போட்டியில் தங்கத்தை வெல்வார் என்ற நம்பிக்கையில், இந்த உதவித் தொகை வழங்கப்படவிருப்பதாக இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ இன்று அறிவித்துள்ளார்.
இந்த உதவித் தொகையைப் பெற்ற பின்னர் அமெரிக்காவிலேயே ஷெரின் பயிற்சியைத் தொடர்வார் என்ற ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
அமைச்சின் 4 லட்சம் ரிங்கிட் உதவித் தொகை, பயிற்சி, தங்குமிடம், உணவு, ஊட்டச்சத்து மருந்து, உடல் மசாஜ் மற்றும் போட்டிச் செலவுகள் முதலியவற்றுக்கு ஷெரினுக்கு ஒரு வருட காலத்திற்கு ஈடு செய்யும் என்று ஓர் அறிக்கையில் ஹன்னா இயோ குறிப்பிட்டார்.