பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.07-
பினாங்கில் உள்ள ஒரு எம்ஆர்எஸ்எம் கல்லூரியில் மாணவர் ஒருவர் பகடி வதை செய்யப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள 7 மாணவர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த சம்பவம் 2024 ஆம் ஆண்டில் மத்திய வாக்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது. விளையாட்டுக்காக தாங்கள் பகடி வதை செய்ததாக அந்த மாணவர்கள் கூறிய போதிலும், அதன் உள்ளடக்கத்தின் தன்மை ஆராயப்பட்டு வருவதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் நோராஸாம் அப்துல் காஃபார் தெரிவித்துள்ளார்.