ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும்

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

பல்லின கட்சியான ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர்களான ஷாரெட்ஸான் ஜொஹான் மற்றும் ஷெபுஃரா ஒத்மான் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது ஜசெக.வில் மலாய்க்கார உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினராக ஷாரெட்ஸான் ஜொஹானும், பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினரான ராரா என்று அழைக்கப்படும் ஷெபுஃரா ஒத்மானும் கேட்டுக் கொண்டனர்.

இன்று கோலாலம்பூர் ஜசெக. தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர்கள் அந்த கோரிக்கையை முன் வைத்தனர்.

WATCH OUR LATEST NEWS