24 மணி நேரத்தில் சேவையைத் தொடர பினாங்கு குடிநீர் வாரியம் திட்டம்

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.07-

வரும் ஏப்ரல் 25 முதல் 28 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பினாங்கில் குடிநீர்த் தடை ஏற்படவிருக்கிறது. நீர்க் குழாய்களை மாற்றும் பணிகள் உட்பட நீர் விநியோகத் தரத்தை உயர்த்துவதற்கு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

இந்த சீரமைப்புப் பணிகளில் மாநிலத்தில் உள்ள 40 விழுக்காட்டு பயனீட்டாளர்களக்கு 24 மணி நேரத்திற்குள் நீர் விநியோகச் சேவையை வழக்க நிலைக்குக் கொண்டு வருவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கே. பத்மநாபன் அறிவித்துள்ளார்.

அதே வேளையில் 88 விழுக்காடு பயனீட்டாளர்களுக்கு 48 மணி நேரத்தில் விநியோகச் சேவை வழங்கப்பட்டு விடும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS