புத்ராஜெயா, ஏப்ரல்.07-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் காயமுற்றவர்களில் 41 பேர் இன்னமும் அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தீ பேரிடரில் காயமுற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 149 பேராகும். இவர்களில் 41 பேர் கடும் காயமுற்றனர்.
6 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இந்த 41 பேரில் 19 பேர் அரசாங்க மருத்துவமனைகளில் சாதாரண வார்டுகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர். மேலும் 22 பேர், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.