கோலாலம்பூர், ஏப்ரல்.07-
இறக்குமதி செய்யப்படும் மலேசியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 24 விழுக்காடு வரி குறித்து மலேசிய மின்சார தொழில்துறை சங்கம் தனது ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையினால் சமூக, பொருளாதாரக் கவலைகள் ஏற்படக்கூடும் என்று அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
காரணம் அமெரிக்காவின் நடவடிக்கையினால் மின்னியல் துறையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வர் என்று அந்த சங்கம் நினைவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் ஒரு தலைப்பட்சமான முடிவினால் மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் செயல்படும் உள்ளூர் நிறுவனங்களுக்கு எதிர்மறையான அழுத்தத்தைக் கொடுக்கக்கூடும் என்று அந்த சங்கம் கவலை தெரிவித்துள்ளது.