டாக்டர் யுஸ்ரி பக்கிர், பாரிசானின் வேட்பாளர்

தாப்பா, ஏப்ரல்.07-

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரா, ஆயர் கூனிங் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளராக உஸ்தாஸ் யுஸ்ரி பக்கிர் போட்டியிடவிருக்கிறார்.

தாப்பா அம்னோ டிவிஷனின் செயலாளரான 54 வயது யுஸ்ரி பக்கிர், பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடவிருப்பதை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று அறிவித்தார்.

தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கல்வியில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ள யுஸ்ரி, ஈப்போவில் உள்ள ஆசிரியர் பயிற்சி கழகத்தில் இஸ்லாமிய கல்விப் பிரிவுக்குத் தலைவராகப் பணியாற்றி வருகிறார் என்று ஜாஹிட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS