கோலாலம்பூர், ஏப்ரல்.07-
அரசாங்கம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் நாட்டில் 109 வீடமைப்பாளர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
தாங்கள் மேற்கொள்ளும் வீடமைப்புத் திட்டத்தின் மேம்பாடுகள் குறித்து ஊராட்சி மன்றங்களிடம் அறிக்கை மற்றும் தணிக்கை அறிக்கை ஆகியவற்றைச் சமர்ப்பிக்கத் தவறியது, இழப்பு குறித்து தெரியப்படுத்தாதது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஓர் அறிக்கையில் ங்கா கோர் மிங் குறிப்பிட்டுள்ளார்.