கோலாலம்பூர், ஏப்ரல்.07-
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான ஆய்வை மேற்கொள்ள முதலீடு, வர்த்தக, தொழிற்துறை அமைச்சு ஒரு சிறப்புப் பணிக்குழுவை உருவாக்கியுள்ளதாக அதன் அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக தரவுகளைச் சரிபார்த்தல், பரிசீலனை செய்வது, அனைத்து தரப்பினரின் கருத்தை கண்டறிதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், அமைச்சின் பிரதிநிதிகள், நாளை செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி, இறக்குமதி தொழிற்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.