ஜோகூர் வெள்ளம்: நிவாரண மையத்தில் தங்கியவர்களின் எண்ணிக்கை சற்று குறைகிறது

ஜோகூர் பாரு, ஏப்ரல்.08-

ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் தங்கியவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. நேற்று வரை 481 பேராக இருந்த தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 472 பேராகக் குறைந்துள்ளது.

பத்து பஹாட் நிவாரண மையத்தில் 110 குடும்பங்களைச் சேர்ந்த 334 பேர் தங்கியிருந்தனர். அந்த எண்ணிக்கை, இன்று காலையில் 109 குடும்பங்களைச் சேர்ந்த 326 பேராகக் குறைந்துள்ளது .

அனைவரும் பத்து பஹாட், ஶ்ரீ காடிங்கில் உள்ள தேசிய இடைநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாக நடவடிக்கைக் குழுத் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS