கோத்தா பெலுட், ஏப்ரல்.08-
ஒரு பெண்ணுக்காகத் தங்களுக்குள் அடித்துக் கொண்டதாக நம்பப்படும் 7 மாணவர்கள் உட்பட 8 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சபா, கோத்தா பெலுட், தாமு கோத்தா பெலுட் அருகில் சாலை வட்டப் பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்த கைகலப்பு தொடர்பில் போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளது..
இதனைத் தொடர்ந்து 14 க்கும் 18 க்கும் இடைப்பட்ட வயதுடைய 7 மாணவர்கள் உட்பட 8 பேரை விசாரணைக்காக போலீசார் தடுத்து வைத்துள்ளனர் என்று கோத்தா பெலுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருடின் மாட் ஹுசேன் தெரிவித்தார்.
தங்கள் காதலி யாருக்குச் சொந்தம் என்பதில் மாணவர்களுக்குள் எழுந்த சர்ச்சை, பொறாமையாக மாறி, பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.