கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய விமானம் சிங்கப்பூருக்குத் திருப்பி விடப்பட்டது

கோலாலம்பூர், ஏப்ரல்.08-

இந்தோனேசியா, டென்பசாரிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டு இருந்த மலேசிய ஏர்லைன்ஸிற்குச் சொந்தமான MH 714 விமானம், அண்டை நாடான சிங்கப்பூருக்குத் திருப்பி விடப்பட்டது.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த மலேசிய ஏர்லைன்ஸ விமானம், தரையிறங்குவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது.

எனினும் அந்த விமானம் திடீரென்று சிங்கப்பூருக்குத் திருப்பி விடப்பட்டது. ஏன் விமானம் சிங்கப்பூருக்குத் திருப்பி விடப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

WATCH OUR LATEST NEWS