தாவாவ், ஏப்ரல்.08-
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சபா, தாவாவ், ஜாலான் ஹாஜி காரிமில் உள்ள ஓர் உணவகத்தில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் அந்த உணவகத்தின் 7 வாடிக்கையாளர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மது போதையில் இருந்ததாக நம்பப்படும் 29 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 7 வாடிக்கையாளர்களுக்கு எதிராக உணவக உரிமையாளர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்த அந்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த கைகலப்பின் போது சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த உணவக உரிமையாளர் போலீஸ் புகார் அளித்துள்ளார் என்று தாவாவ் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சம்பின் பியூ குறிப்பிட்டார்.