ஒரு கோடியே 43 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல்.08-

கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி வட்டாரத்தில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஒரு கோடியே 43 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது மூலம் அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூர் சிறைச்சாலையிலிருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட ஆடவர் ஒருவரும், அவரின் காதலியும் பிடிபட்டது மூலம் அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் அந்த ஆணும், பெண்ணும் தந்த தகவலின் பேரில் பெரியளவில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த போதைப் பொருள் சிங்கப்பூர், இந்தோனேசியா சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டு இருந்ததாக நம்பப்படுகிறது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இடைக்கால இயக்குநர் மாட் ஸானி முகமட் சாலாஹூடின் தெரிவித்தார்.

முதல் சோதனை, மாலை 5.35 மணியளவில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் கார் நிறுத்தும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையின் போது 28 வயது மதிக்கத்தக்க காதல் ஜோடி கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது சோதனை மாலை 6.15 மணியளவில் ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக இன்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மாட் ஸானி இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS