தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் கடைசியாக பாலிவுட் பக்கம் சென்று பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி, ரூ. 1000 கோடி வசூல் வேட்டை படத்தைக் கொடுத்தார்.
இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்தின் மூலம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையைக் கொடுத்தார். தற்போது இந்த 2 வசூல் வேட்டை நாயகர்களும் ஒன்றாக பெரிய படத்தில் இணைகிறார்கள். இந்நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 600 கோடிக்கும் மேல் எனக் கூறப்படுகிறது.