பட்டர்வொர்த், ஏப்ரல்.08-
பட்டர்வொர்த் புறவட்ட சாலையான லிங்காரான் லுவார் பட்டர்வொர்த் முதன்மை சாலையில் எதிர்த்திசையில் பள்ளி வேனைச் செலுத்திய அதன் ஓட்டுநரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று மதியம் 12.55 மணியளவில் வாகனங்களின் போக்குவரத்துக்கு மத்தியில் மிக அபாயகரமாக எதிர்த்திசையில் வாகனத்தைச் செலுத்திய நபர் குறித்து கிடைக்கப் பெற்ற தகவலில் அடிப்படையில் அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
70 வயதுடைய அந்த ஓட்டுநர், தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்று அறியப்பட்டுள்ளது.