கொள்ளைச் சம்பவம்: இரு சந்தேகப் பேர்வழிக்கு வலை வீச்சு

சுங்கை பூலோ, ஏப்ரல்.08-

சுங்கை பூலோ, புன்சாக் ஆலாம், ஜாலான் ஆலாம் சூரியா, செக்‌ஷன் 16 இல் இரண்டு வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற பாராங் கத்தி ஏந்திய இரு நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு புகார்கள் அந்தப் பகுதியில் இருந்து கிடைத்துள்ளதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ஹாபிஃஸ் முகமட் நோர் கூறினார்.

இரவு 11 மணியளவில் தனது வீட்டின் பின்னால் முகமூடி அணிந்த நிலையில் பாராங் கத்தி ஏந்திய இரண்டு ஆடவர்கள் இருந்ததைத் கண்டதாக 44 வயதுடைய புகார்தாரர் ஒருவர் தெரிவித்திருந்ததை முகமட் ஹாபிஃஸ் சுட்டிக் காட்டினார்.

புகார்தாரர் மற்றும் அவரது மனைவியை நோக்கி சந்தேகப் பேர்வழிகள், பாராங்கை காட்டி மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து புகார்தாரரின் மனைவி உதவிக்காக அலறியதால் அந்த இரு சந்தேகப் பேர்வழிகள் அங்கிருந்து தப்பியோடியதாக முகமட் ஹாபிஃஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குற்றவியல் சட்டத்தின் 393 ஆவது பிரிவின் கீழ் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS