ஷா ஆலாம், ஏப்ரல்.08-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த இரண்டாவது நாளிலிருந்து நேற்று வரை நாள் ஒன்றுக்கு 12 டன் முதல் 18 டன் வரை வீட்டுக் குப்பைகள் மற்றும் திடக் கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக KDEB Waste Management நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி தாஹிர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் தாமான் ஹார்மோனி மற்றும் கம்போங் கோல சுங்கை பாருவில் நேற்று முதல் RORO குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.