கோத்தா பாரு,
நெல் வயலில் மனித மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கிளந்தான், பாசீர் பூத்தே, கம்போங் புக்கிட் அபால், செலிசிங் என்ற இடத்தில் மனித எலும்புக் கூடு கண்டு பிடிக்கப்பட்டதாக பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஸுல் ரிஸால் ஸாகாரியா தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று பிற்பகல் 3 மணியளவில் பொது மக்களிடமிருந்து தாங்கள் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
மண்டை ஓடும், எலும்புக் கூடும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் குற்றச்செயல் நடந்தற்கான எந்தவொரு தடயமும் கண்டறியப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
எனினும் மீட்கப்பட்ட அந்த மனித எலும்புக் கூடு, சோதனைக்கான தடயவியல் பிரிவுக்கு அனுப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.