சுபாங் ஜெயா, ஏப்ரல்.08-
புத்ரா ஹைட்ஸ் தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 55 பேருக்கு ஒரு முறை கிடைக்கக்கூடிய மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை Spanco நிறுவனம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதியில், கோல சுங்கை பாரு மக்களே அதிகளவில் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்டவர்கள் முதலாவது ஆண்டில் மோட்டார் சைக்கிள்களுக்கான காப்புறுதி மற்றும் வாகனப்பதிவு எண்ணுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அவை இலவசமாக செய்து கொடுக்கப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று மோட்டார் சைக்களிள்களை ஒப்படைக்கும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.