ஆடவரிடமிருந்து விலங்கினங்கள் பறிமுதல்

ஜோகூர் பாரு, ஏப்ரல்.09-

உளவுத் தகவல் அடிப்படையில் கூட்டரசு சேமப்படையினரும், வனவிலங்கு, தேசியப் பூங்கா இலாகாவினரும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஆடவர் ஒருவரிடமிருந்து 91 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புக்கிட் அமான் போலீஸ் தலைமைகத்தைச் சேர்ந்த FRU- பிரிவினரும், ஜோகூர் பெர்ஹிலிதான் இலாகாவினரும் கடந்த திங்கட்கிழமை ஜோகூர் பாரு, பண்டார் பாரு கங்கார் பூலாயில் உள்ள இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் பாதுகாக்கப்பட வேண்டிய பலதரப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் மொத்த மதிப்பு 91 ஆயிரம் ரிங்கிட்டாகும் என்று அரச மலேசியப் போலீஸ் படையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதிப் பிரிவு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வன விலங்குகளில் சருகுமான், முள்ளம்பன்றி போன்றவை அடங்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. காட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த விலங்கினங்களைச் சட்டவிரோத வர்த்தக நோக்கத்தில் வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS