ஈப்போ, ஏப்ரல்.09-
ஈப்போ, கம்போங் ராபாட்டில் ஒரு வீட்டில் ஐந்து முறை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக நம்ப்பபடும் ஆடவர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கடநத் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை 62 வயது மாது, ஐந்து போலீஸ் புகார்களை அளித்து இருப்பதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், அந்த பெண்மணி வீட்டின் வேலியில் எச்சரிக்கை குறிப்பையும் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடன் விவகாரம் தொடர்பாக இந்த பெட்ரோல் தாக்குதல் நடந்துள்ளதாக நம்பப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.