போலீஸ்காரர் சொந்தமாகச் சுட்டுக் கொன்றது, விசாரணை நடைபெறுகிறது

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.09-

பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் பாதுகாவல் அறையில் போலீஸ்காரர் ஒருவர் சொந்தமாகச் சூடுப்பட்டு, காயமுற்ற சம்பவம் தொடர்பில் போலீசார் தற்போது பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

காப்பரல் அந்தஸ்திலான அந்த போலீஸ்காரர் , பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர கண்காணிப்புப் பிரிவான சிவப்பு பகுதி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் 1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தவிர, புலன் விசாரணையைப் பாதிக்கும் தன்மையிலான ஆருடம் எதனையும் கூற வேண்டாம் என்று பொது மக்களை டத்தோ ஹம்ஸா கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS