கோலாலம்பூர், ஏப்ரல்.09-
ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் முன்னாள் தூதர் அஜய் ஷர்மா, மலேசியாவிற்கான புதிய பிரிட்டிஷ் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவிற்கான பிரிட்டிஷ் தூதராக சேவையாற்றிய அயில்சா தெர்ரிக்கு பதிலாக அஜய் ஷர்மா, நியமிக்கப்பட்டுள்ளார்.
மாஸ்கோ, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் தூதரகப் பணிகளை அஜய் ஷர்மா மேற்கொண்டுள்ளார். தூதரகத் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பரந்த அனுபவத்தை அஜய் ஷர்மா கொண்டுள்ளார்.