கோலாலம்பூர், ஏப்ரல்.09-
சீன அதிபர் ஸி ஜின்பிங், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மலேசியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிருக்கிறார் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்துள்ளார்.
சீன அதிபரின் வருகை தொடர்பான மேல் விரங்கள் வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவிக்கும் என்று டத்தோ பாஃமி பாஃட்சீல் குறிப்பிட்டார்.