தைவானில் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

தைபெய், ஏப்ரல். 09-

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

தைவான் நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது உண்டு. 1999ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2024ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் பலியாகினர்.

இந்நிலையில் தலைநகரான தைபெயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் போது உயிரிழப்போ, சேதாரமோ பதிவு செய்யப்படவில்லை.

WATCH OUR LATEST NEWS