ஆடவர் மயங்கி விழுந்து மரணமுற்றார்

ஆயர் குரோ, ஏப்ரல்.09-

மலாக்கா, ஆயர் குரோ, உள்துறை அமைச்சின் கட்டட வளாகத்தில் காத்திருந்த ஆடவர் ஒருவர் மயங்கி விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் நிகழ்ந்தது. கடப்பிதழ் அலுவல் நிமித்தமாக மலாக்கா குடிநுழைவுத்துறை அலுவலகத்தில் அந்த நபர் காத்திருந்த போது திடீரென்று மயங்கி விழுந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

துப்புரவு பணி ஏஜெண்டான அந்த நபர், உடனடியாக மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் அவரின் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது என்று ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS