தானா மேரா, ஏப்ரல்.09-
கிளந்தான் – தாய்லாந்து எல்லைப் பகுதியான சுங்கை கோலோக் ஆற்றைக் கடந்து மலேசியாவிலிருந்து வெளியேறி விடலாம் என்ற நப்பாசையில் தப்பிக்க முயற்சி செய்த நான்கு மியன்மார் பிரஜைகள், பாதுகாப்புப் படையினரால் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.
நேற்றிரவு செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் அவர்கள் ஆற்றறைக் கடக்க முயற்சி செய்ததாக பாதுகாப்புத் துறையினர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
25 க்கும் 75 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும், மலேசியாவிலிருந்து வெளியேறி, மியன்மாருக்குச் செல்வதற்கு தாய்லாந்து படகுகாரர்களின் சேவையைப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.