புத்ராஜெயா, ஏப்ரல்.09-
கடந்த ஆண்டு சிலாங்கூர், காப்பார், கம்போங் தோக் மூடாவில் Blackshapr Gabriel BK 160TR ரகத்திலான சிறு விமானம் விபத்துக்குள்ளானதற்கு, அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடையை ஏற்றியதே முக்கியக் காரணமாகும் என்று விமானப் பேரிடர் புலன் விசாரணை அறிக்கை கூறுகிறது.
இருவர் உயிரிழந்த இந்த விபத்து தொடர்பாக 204 பக்கங்களை உள்ளடக்கிய விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதிக எடையின் காரணமாக வானில், அந்த விமானம் நிலைத்தன்மையை இழந்து விட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.