புத்ராஜெயா, ஏப்ரல்.09-
சிலாங்கூர் மாநிலத்திற்கு இவ்வாண்டு 1 கோடியே 47 லட்சம் ரிங்கிட் பேரிடர் உதவி நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த
நிதியை நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் வாயிலாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
பேரிடரில் பாதிக்கப்படும் குடும்பத் தலைவருக்குக் கருணைத் தொகையாக 1,000 ரிங்கிட்டும், பேரிடரில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 10,000 ரிங்கிட்டும் வழங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று நட்மாவின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ஷாரில் இட்ருஸ் கூறினார்.
கடந்த வாரம் சுபாங் ஜெயாவில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.