ஈப்போ, ஏப்ரல்.09-
பேரா, சுங்கை சிப்புட்டில் சைக்கிளில் பயணம் செய்து கொண்டு இருந்த ஜெர்மனியப் பிரஜை ஒருவர் மயங்கி விழுந்து மரணமுற்றார். இச்சம்பவம் இன்று காலை 10.40 மணியளவில் சுங்கை சிப்புட், ஜாலான் பெர்லோப் 1 இல் நிகழ்ந்தது.
67 வயதுடைய அந்த ஜெர்மனியப் பிரஜைக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.