காஜாங், ஏப்ரல்.10-
காஜாங், பண்டார் தெக்னோலோஜி காஜாங்கில் நிகழ்ந்த தீச் சம்பவத்தில் கார் உப பாகங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்று அழிந்தது.
இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காஜாங் மற்றும் பாங்கி ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 17 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் , தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் முழு வீச்சில் கட்டுப்படுத்தியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
அந்த தொழிற்சாலையின் கட்டட அமைப்பு முறையில் 40 விழுக்காடு அழிந்தது. எனினும் உயிர்சேதம் எதுவும் நிகழவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.