வாஷிங்டன், ஏப்ரல்.10-
அமெரிக்கா அண்மையில் அறிவித்த வரிகள் பெரும்பாலானவற்றை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாய் நேற்று தெரிவித்துள்ளது.
இந்த புதிய வரி, நேற்று அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இந்நிலையில் வரி விதிப்பு, நடப்புக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் அதிபர் டோன்ட் டிரம்ப், வரி விதிப்பு 90 நாட்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த கூடுதல் வரியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அவகாசம் அளிக்க இந்த ஒத்திவைப்பு உதவும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
எனினும் கிட்டதட்ட அனைத்து இறக்குமதிகளுக்குமான அடிப்படை வரி 10 விழுக்காடாக இருக்கும் என்று அவர் கூறினார்.
சீனாவிற்கான வரிகள் மட்டும் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 104 விழுக்காடாக இருந்த வரி விகிதம் தற்போது 125 விழுக்காட்டிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
உலகச் சந்தைக்குச் சீனா போதிய மரியாதை கொடுக்கவில்லை என்று டிரம்ப் குறைகூறினார்.