பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.10-
கடந்த செவ்வாய்க்கிழமை தாய்லாந்து, ஹாட் யாயில் உள்ள பேரங்காடி மையத்தின் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகளை கொள்ளையடித்த மலேசியப் பிரஜையை தாய்லாந்து போலீசார் கைது செய்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தாய்லாந்து போலீசாரால் 61 வயதுடைய மலேசியப் பிரஜை மிகத் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், அந்த சந்தேகப் பேர்வழி , தாய்லாந்து, தலைநகர் பேங்காக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நொந்தாபுரி மாவட்டத்தில் உள்ள அந்த சந்தேகப் பேர்வழி மகனின் வீட்டில் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்தனர்.
ஹாட் யாயில் கொள்ளையை நிகழ்ந்தி அந்த மலேசியப் பிரஜையை நகைக்கடையில் பொருத்தப்பட்ட ரகசிய கேமராவின் மூலம் அடையாளம் காணப்பட்டதாக தாய்லாந்து போலீஸ் அதிகாரி அனோசோன் தொங்சி தெரிவித்தார்.