அட்லீ – அல்லு அர்ஜூன் கூட்டணியில் இணையும் சாய் அபயங்கர்

இயக்குனர் அட்லீ அல்லு அர்ஜுனைக் கதாநாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இதனிடையே, அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவது தொடர்பான வீடியோவை அட்லீ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். ஆனால் படம் தொடர்பான எந்த தகவலையும் அவர் கூறவில்லை.

இந்நிலையில், அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இயக்குனர் அட்லீ எக்ஸ் தள பக்கத்தில், அல்லி அர்ஜுனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பல படங்களுக்கு இசையமைக்கவிருக்கிறார். அதன்படி, சூர்யா 45, எஸ்டிஆர் 49, பென்ஸ், பிஆர்04, ஏஏ22Xஏ6 என அடுத்தடுத்து படங்கள் தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS