கொள்ளைச் சம்பவம்: சந்தேகப் பேர்வழி கைது

ஜோகூர் பாரு, ஏப்ரல்.10-

ஓர் இந்தியப் பிரஜையை மடக்கி ஆயுதமுனையில் கொள்ளையிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 27 வயது ஆடவரை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று ஏப்ரல் 9 ஆம் தேதி தாமான் நூசா பெஸ்தாரியில் துப்பாக்கி போன்ற ஒரு சுடும் ஆயுதத்தைக் காட்டி ஆடவர் ஒருவர், தம்மிடம் கொள்ளையிட்டதாக 35 வயதுடைய ஓர் இந்தியப் பிரஜை செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை, போலீசார் தாமான் உங்கு துன் அமினாவில் கைது செய்யதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS