கற்பழிப்பும், தகாத உறவும் கிளந்தானில் மட்டும் நிகழவில்லை

கோத்தா பாரு, ஏப்ரல்.10-

கற்பழிப்புச் சம்பவங்களும், குடும்ப சொந்தங்கள் மத்தியில் தகாத உறவும் கிளந்தான் மாநிலத்தில் மட்டும் நிகழவில்லை என்று மாநில மந்திரி பெசார் முகமட் நஸுருடின் டாவுட் தெரிவித்துள்ளார்.

கிளந்தான் மாநிலத்தில் கற்பழிப்புச் சம்பவங்களும், குடும்ப சொந்தங்கள் மத்தியில் தகாத உறவுகளும் அதிகரித்து வருவதாக மாநில போலீஸ் தலைவர் முகமட் யூசோப் மாமாட் நேற்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் கிளந்தான் மந்திரி பெசார் மேற்கண்டவாறு கூறினார்.

கிளந்தானில் ஆகக் கடைசியாக நடந்த சம்பவத்தில் 11 வயது சிறுவன் ஒருவன், தனது உறவுக்காரின் மகளான 15 வயது பெண்ணைக் கர்ப்பிணியாக்கியிருக்கும் சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் கிளந்தான் போலீஸ் தலைவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

கிளந்தானில் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கும் 2024 ஆம் ஆண்டுக்கும் இடையில் நடந்த சம்பவங்களை ஒப்பிடுகையில் உறவுக்காரர்கள் மத்தியில் விருப்பத்தின் பேரில் நடந்த தகாத உறவுச் சம்பவங்களும், கற்பழிப்புச் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

WATCH OUR LATEST NEWS