தேசியக் கீதத்தை மாணவர்கள் சீனமொழியில் பாடினார்களா? தவறான தகவலை வெளியிட்ட ரத்து நாகா கைது

ஈப்போ, ஏப்ரல்.10-

பேராவில் சீனப்பள்ளி ஒன்றில் மாணவர்கள், தேசியக் கீதத்தை சீனமொழியில் பாடினார்கள் என்று தவறான தகவலை வெளியிட்டு, இன நல்லிணக்கத்திற்கு ஊறுவித்ததாக நம்பப்படும் சமூக ஊடக பிரபல பெண்மணியான ஷாருல் ஏமா ரேனா அபு சாமா என்ற ரத்து நாகா கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண்மணியை பேரா மாநில போலீசார் கைது செய்து இருப்பதை அவரின் வழக்கறிஞர் ஸையிட் மாலேக் உறுதிப்படுத்தினார்.

தேசியக் கீதத்தை சீனப்பள்ளி மாணவர்கள், சீன மொழியில் பாடினார்கள் என்று குற்றஞ்சாட்டி, சமூக வலைத்தளங்களில் அந்தப் பெண்மணி வெளியிட்ட உள்ளடக்கம், பதிவேற்றம் செய்யப்பட்ட பத்தே நிமிடத்தில் அவர் அகற்றிவிட்டார்.

எனினும் அந்த பத்து நிமிடத்திற்குள் அந்த தவறான உள்ளடக்கம், ஆயிரக்கணக்கானோரிடம் சென்றடைந்ததைத் தொடர்ந்து அந்த உள்ளடக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தனது செயலுக்காக அந்தப் பெண்மணி பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்ட போதிலும் அவர் வைரலாக்கிய அந்த உள்ளடக்கம், சீனப்பள்ளிகளுக்கு எதிராக தவறான தோற்றத்தை ஏற்படுத்தியது என்பதுடன் பலர் அது குறித்து விமர்சனமும், சர்சசையும் செய்வதற்கு வழிவகுத்தது.

பொய்யான ஒரு தகவலை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக பெர்க்காத்தான் நேஷனல் ஆதரவாளரான ரத்து நாகா, தற்போது நிந்தனை சட்டம் 233 ஆவது பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

WATCH OUR LATEST NEWS