கோலாலம்பூர், ஏப்ரல்.10-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பினால் அந்நிய நாணயங்களின் மதிப்பு சரிவு கண்ட நிலையில் அந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்கா முடிவு செய்ததைத் தொடர்ந்து பன்னாட்டு நாணயங்களின் மதிப்பு மீட்சிக் காணத் தொடங்கியுள்ளது.
சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கிய நிலையில் ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசியாவின் ரிங்கிட் மதிப்பு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 4.4670 / 4.730 என்ற அளவில் உயர்வு கண்டுள்ளது என்று Bank Muamalat பொருளாதாரப் பிரிவு தலைவர் டாக்டர் முகமட் அப்ஃஸானிஸாம் அப்துல் ரஷிட் தெரிவித்துள்ளார்.