சிப்பாங், ஏப்ரல்.10-
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் சென்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லும் ஈஆர்எல் விரைவு ரயில் சேவைக்கு இடையூறு ஏற்படும் வகையில் இருப்புப் பாதையின் சமிக்சை விளக்கு கேபள்கள் வெட்டி, எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் போலீசார் மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
ஈஆர்எல் ரயில் சேவையின் பாதுகாவலர் பிரிவைச் சேர்ந்த புகார்தாரர் உட்பட மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஜி.கே ஷான் கோபால் தெரிவித்தார்.
அந்த சக்தி வாய்ந்த கேபள்கள் எவ்வாறு வெட்டப்பட்டது என்பது குறித்து அங்கு பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களின் வாயிலாக தாங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.