காஜாங், ஏப்ரல்.10-
காஜாங், செராஸ், Batu 9- னில் உள்ள ஒரு சிறார் பராமரிப்பு இல்லத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சித்ரவதை சம்பவம் தொடர்பில் அந்த இல்லத்தைப் பராமரித்து வரும் கணவனையும், மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தாம் கன்னத்திலேயே அறையப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு வந்தததாக 18 வயது பெண் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து 66 வயது கணவரையும், 68 வயது மனைவியையும் போலீசார் கைது செய்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
அந்த தம்பதியருக்கு எதிராக கடந்த ஏப்ரல் முதல் தேதி செய்து கொண்ட போலீஸ் புகாருக்கு அப்பாற்பட்ட நிலையில் மேலும் இரண்டு புகார்கள் அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ளதாக ஏ.சி.பி. நாஸ்ரோன் குறிப்பிட்டார்.